இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நடுவே கடந்த சில மாதங்களாக மோதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் இருவருக்கும் இடையே கடந்த மே மாதம் தாக்குதல் ஏற்பட்டது. இதில் காசா முனையைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்காக ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய பகுதிகளை குறிவைத்து தாக்கியுள்ளனர். இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் காசா பகுதியிலிருந்து நேற்று பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் காசா அமைப்பின் மீது விமான தாக்குதல் நடத்தியது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஹமாஸில் உள்ள ராணுவ பகுதியிலும் ஏவுகணை தளத்திலும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் இது குறித்து ஹமாஸ் அமைப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை” என்று கூறியுள்ளார்.