பொருளாதார சீர்கேடு பெஞ்சமின் மீதான முறைகேடு குறித்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டே வரும் நிலையில் இஸ்ரேல் மக்கள் தலைவரை முடிவு செய்யவில்லை.
இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது. பொருளாதார சீர்கேடு கொரோனா பரவுதலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நடை பெற்றுள்ளது . முதலில் நடைபெற்ற மூன்று முறையும் யாருக்கும் பெரும்பான்மையான வாக்கு கிடைக்காததால் நேற்று 4-வது முறையாக பொது தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தல் நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவதால் வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த நிலையில் 87.5 % வாக்களிப்பு நடைபெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடை பெற்ற நிலையில் 59 தொகுதிகளில் பெஞ்சமின் நேதன்யாகு லிக்குட் கட்சி கூட்டணி வெற்றி பெற்று முன்னணியில் இருந்தது. மேலும் எதிர்க்கட்சி கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுவதால் ஆட்சி உரிமை யாருக்கு என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில் 5 இடங்களை மட்டும் வெற்றி பெற்றுள்ள என்று அழைக்கப்படும் சிறிய அரபு கட்சி புதிய கட்சியை தேர்ந்தெடுக்கும் கிங்மேக்கர் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்சியின் ஆதரவு யாருக்கு அளிக்கபடுகிறதோ அவர்களே இந்த முறையாக பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும் என்று அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் இன்னும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவிட்டால் மீண்டும் 5-வது முறையாக பொது தேர்தல் நடக்கும் என்று அதிரடி முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது.