Categories
தேசிய செய்திகள்

ISRO-வின்   ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 30, இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரெஞ்சு கயானாவிலுள்ள கவுரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் – 5 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட் – 30 செயற்கைக்கோள் தொலைதொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் ஆகிய சேவைகளுக்கு உதவும் எனவும், இச்செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், ஜிசாட் -30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Categories

Tech |