துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த வழக்கில் தற்போது, அட்னான் அக்தாருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது, 8,658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 10 பேருக்கு இதே போல் 8,658 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.