இஸ்வர்யாவின் பயணி பாடல் வீடியோவை தன் அப்பா ரிலீஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி காதல் பாடல் வீடியோ நேற்று மாலை 4.44 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிரஞ்சீவி, ராணா, துல்கர் சல்மான் மற்றும் பலர் அனைவரும் வீடியோவை கண்டிப்பாக பார்த்து ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பயணி வீடியோ மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரசிகர்கள் இந்த பாடலை ரஜினிகாந்த வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பயணி பாடல் வீடியோவை தன் அப்பா வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ‘இதைவிட உங்களுக்கு பெரிய ஆசி கிடைத்து விட முடியாது. இனி எல்லாம் ஜெயமே ஐஸ்வர்யா’ என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.