சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகள் மிகுந்த பொருளாதார இழப்பை சந்தித்தது. இதனையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின்பு உலக நாடுகளில் இருக்கும் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகப்படியான தொகையை டெக் சேவை மேம்பாட்டில் முதலீடு செய்து ஊழியர்களின் தேவையை குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து IT சேவை நிறுவனங்களும் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள திட்டமிட்டன.
அதன் அடிப்படையில் இந்திய IT சேவை நிறுவனங்கள் குறைந்த செலவில் சிறந்த IT சேவைகளை வழங்கத் தொடங்கி அதிகப்படியான சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றது. அவ்வாறு பெற்ற பின் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான திட்டங்களை பெற்றதால் குறிப்பிட்ட தேதிக்குள் ப்ராஜெக்ட்டுகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்திய IT சேவை நிறுவனங்கள் தங்களுக்கு தகுதியான மற்றும் திறமையான IT ஊழியர்களை மற்ற நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்க வேண்டிய கட்டாயம் நிலவியது. அதாவது புதிதாக சேருபவர்களுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிக திறமையுடைய IT ஊழியர்களுக்கு 60 முதல் 120 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். இவ்வாறாக கடந்த ஆண்டை போல் இந்த வருடமும் IT ஊழியர்களுக்கு 120% வரை ஊதிய உயர்வு வழங்கி பணியமர்த்தப்படுவார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது Xpheno நிறுவனத்தின் அறிவிப்பின்படி கடந்த வருடத்தை போல் புல் ஸ்டாக் இன்ஜினியர்ஸ், டேட்டா சியின்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், பேக்என்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் திறமை வாய்ந்த IT ஊழியர்களுக்கு 60 முதல் 120% வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.