Categories
மாநில செய்திகள்

IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஜனவரி முதல்….  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2020ஆம் ஆண்டில் இருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை மாற்றி 12, மணி நேரமாக இருந்தது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம், வேலையில் சிக்கல் குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர். இதனால் மீண்டும் ஐடி நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க விரும்புகின்றனர். தனியார் நிறுவனத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50% பணியாளர்களை பணிக்கு அழைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் 45 வயதுக்கும் கீழுள்ள ஊழியர்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க உள்ளது.  இதைத்தொடர்ந்து 2022 ஜனவரி முதல் ஜூலை மாதத்திற்குள் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதாக ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களுக்கும் 50% க்கும் அதிகமான ஐடி நிறுவன ஊழியர்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மற்றும் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க வேண்டி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |