ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டினை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்பு ஈஸ்வரர் கோவிலில் ஒரு பாறை கல்லின் மூன்று பக்கங்களில் கல்வெட்டு இருப்பதாக அம்மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவரான ராஜகுருவுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கல்வெட்டில் எழுதியிருக்கும் எழுத்துக்களின் தன்மை கொண்டு கிபி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ‘ஸ்வஸ்திஸ்ரீ” என தொடங்கிய கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் இருந்துள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்வெட்டு வெயிலிலும், மழையிலும் இருந்ததால் கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அழியும் சூழலில் இருந்துள்ளது. இந்த கல்வெட்டு மடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை குறிக்கும் வகையில் கிழக்கில் ராரா பெருவழி என பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. இதற்கு விளக்கம் ராஜராஜ சோழனின் பெயரில் அழைக்கப்படுகின்ற கிழக்கு கடற்கரை பெருவழி ஆகும். இந்நிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த கல்வெட்டை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.