Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு புயலுக்கே மெரினாவில் அது தாங்கல”…. நாட்டு நடப்பே தெரியாம பொய் சொல்லிட்டு திரிறாரு….CM‌ ஸ்டாலினை சாடிய டி.ஜெ….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் இன்னும் 10 முதல் 20 நாட்களுக்கு கடலுக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் 10,000 முதல் 25 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க முன் வர வேண்டும். மக்கள் இப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருக்க முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாட்டு நடப்பே தெரியாத ஒருவர் முதல்வராக இருக்கிறார். அவர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சை கேட்டு தான் அப்படி பேசுகிறார்.

ஆனால் அவர் கள நிலவரத்தை உணர்வது கிடையாது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்பவர்கள் தான் மன்னராகவும், முதல்வராகவும் இருக்க முடியும். ஆனால் தமிழகத்தை பொம்மை முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஒரு புயலுக்கு கூட தாங்க முடியாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் நடைபாதை அமைத்து அவர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று சாடியுள்ளார்.

Categories

Tech |