Categories
உலக செய்திகள்

சொந்த மாளிகையில் குண்டு வீச சொன்ன தொழிலதிபர்…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு  ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார்.

தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். அது மட்டுமன்றி, தன் குடியிருப்பு மற்றும் நிலங்களை சுற்றி கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதனை வைத்து வீட்டை கண்காணித்து வந்திருக்கிறார். இந்த கேமராக்களின் மூலம் அவருக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்திருக்கிறது.

ரஷ்யப்படையினர் அவரின் நிலத்தில் இருப்பதையும், பல வகை இராணுவ ஆயுதங்களை கொண்டு வந்ததையும் பார்த்திருக்கிறார். எனவே, தான் உக்ரைன் படையினரிடம் தன் மாளிகையை தகர்க்க கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படையினர் வேறு வீடுகளிலிருந்து சில பொருட்களை என் குடியிருப்புக்கு கொண்டு வருவதை நான் பார்த்தேன்.

இதுமட்டுமல்லாமல் அங்கிருந்து கணினிகள், தொலைக்காட்சிகள், ஐபாட்கள் போன்ற பிறரின் தனிப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை பார்த்தேன். எனக்கு வெறுப்பாகிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |