சென்னை நந்தனத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் AKவிசுவநாதன் துவக்கி வைத்தார்.
வாகனங்களை கண்காணிப்பதுடன் நம்பர் பிளேட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எண்களை துல்லியமாக பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில்விதிமீறல், பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவோர் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை இதன் மூலம் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை அண்ணா அசோஷியேஷன் மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 கேமராக்களை வழங்கியுள்ளது. சென்னை முழுவதும் 335 சாலைகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. புதியவகை கேமரா மூலம் பைக் ரேசில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.