ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து ஏற்படுத்தி தரப்பட வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 80% ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தி வந்தனர். அதன்படி, பார்க்கையில் ஏப்ரல் 20 க்கு பிறகு போக்குவரத்து வசதி இல்லாமல் எங்களால் பணிக்கு வர இயலாது. ஆகவே அரசு அளித்த இந்த அனுமதியை அரசே திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.