Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன பிரச்சனையா இருக்கும்… ஐ.டி நிறுவன பெண் அதிகாரிக்கு நடந்த சோகம்… சென்னையில் பரபரப்பு…!!

ஐ.டி நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் வினோத்குமார் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

இவர்களுடைய குழந்தைகள் தாத்தா வீட்டிற்கு சென்று விட்டனர். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த அனிதா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |