Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா குடுத்து 10 வருடம் ஆகிட்டு… இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கல… சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் மேலாகியும் இடம் ஒதுக்கீடு செய்து தராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட அக்கிரமேசி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டில் மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு அப்பதியில் உள்ள 17.84 ஏக்கர் நிலம் அரசே வாங்கி 350 குடும்பத்தினருக்கு 2014ஆம் ஆண்டில் அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பட்டா வழங்கி பல ஆண்டுகள் ஆனா நிலையில் அதற்கான வீட்டுமனைகள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதற்காக பலமுறை புகார் தெரிவித்தும் கூட நிர்வாகம் எவ்வித பதிலளிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள 100க்கும் பெறப்பட்ட பொதுமக்கள் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பட்டாவுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |