வடலூரில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்றும், பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழக சட்ட பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்களாகியுள்ளது.. சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதாவது, வேளாண்மையின் பெருமையை இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூபாய் 2.75 கோடியில் செயல்படுத்தப்படும். காய்கறி கழிவு உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் என்றார்.
மேலும் கடலூர் மாவட்டம் வடலூரில் ரூபாய் 1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் ரூபாய் 5 கோடி செலவில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றார்..