Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா போட்டி… ஸ்டாலின் அறிவிப்பு..!!

செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் 3 மாநிலங்களவைக்கான இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13 இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்…

எம்.எம் அப்துல்லாவை  “புதுக்கோட்டை அப்துல்லா” என்று அழைப்பார்கள். திமுக உடைய சிறுபான்மையினர் பிரிவில் அவர் பணியாற்றிய அந்த அடிப்படையில் அந்த பொறுப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது.. புதுக்கோட்டையை சேர்ந்த எம்.எம் அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் இணை செயலாளராக இருக்கிறார்..

Categories

Tech |