வருகிற 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கும் பணி தொடங்க உள்ளதால் அதற்கு அடுத்த நாள் 3 ஆம்தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடை திறந்திருக்கும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், ரேஷன் ஊழியர்களுக்கு அந்நாளுக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஞாயிறன்று ரேஷன் கடைகளில் பொருட்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் வருகிற 3 ஆம் தேதி கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.