ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக உயர்ந்தது. இதில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் சிகிச்சை பெற்று வந்த 58 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 2 வாரங்கள் தனிமைபப்டுத்தப்படுவதாகவும், 45 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..