Categories
உலக செய்திகள்

அபாயம் : ஒப்பந்தத்தை மீறும் பிரபல நாடு…. பேச்சுவார்த்தைக்கு ரெடியாகும் வல்லரசு நாடுகள்….!!

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே முறிந்து போகும் நிலையில் உள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வருகின்ற வியாழன்கிழமை ஈரானுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய குழு தலைவர் என்ரிக் மோரா நடைமுறையில் சாத்தியமாகும் யோசனைகளை மட்டுமே ஈரான் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டில் ஈரானுக்கும் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில் ஈரான் நாடு இந்த அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதனை உறுதி செய்து ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது. அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்குவதாக ஒப்புக்கொண்டது. அதன்பிறகு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் ஒப்பந்தத்தின் போது நீக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை மீண்டும் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் தற்போது ஒப்பந்த நிபந்தனைகளை மீறி வருகிறது. இதன் காரணமாக தற்போது அந்த ஒப்பந்தமானது முறிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

Categories

Tech |