காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது
காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே வரவேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையும் இன்னொரு பக்கம் வந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லாத ஒருவர் தலைவராக வர வேண்டுமா ? அல்லது காந்தி குடும்பத்திலிருந்து சோனியா காந்தியே தொடர்வது அல்லது ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக இருப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது..
இந்த நிலையில் காணொளி மூலம் நடந்து வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.