Categories
உலக செய்திகள்

வேற வழியே இல்ல…. தீயாய் பரவும் “ஒமிக்ரான்”…. அமலுக்கு வரும் கட்டுபாடுகள்….!!

பிரித்தானிய அரசு அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பயண கட்டுபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதன்படி பிரித்தானிய அரசு புதிய பயண கட்டுப்பாட்டுகளை வருகின்ற 7-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள் கொரோனா பரிசோதனையை பயணம் மேற்கொள்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு செய்திருக்க வேண்டும்.

பின்னர் பிரித்தானியா வந்தடைந்த பிறகு அங்கு கொரோனா பரிசோதனை முடிவுகளை பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் Sajid Javid, பயணத்தின் மூலம் “ஒமிக்ரான்” வைரஸ் அதிகரித்து வருவதால் இந்த பயண கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நைஜீரியா நாடு பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பிரித்தானியா வந்து இறங்கும் பயணிகளில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பத்து நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். அதற்காக அவர்கள் ஹோட்டலில் 2000 பவுண்டு தொகையை செலுத்த வேண்டும். பிரித்தானியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 27-ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த கடுமையான பயண கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் Sajid கூறியுள்ளார்.

Categories

Tech |