பிரித்தானிய அரசு “பிளான் பி” கட்டுப்பாடுகளை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் மூத்த அரசாங்க வட்டாரங்கள் “பிளான் பி” கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தும் திட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது NHS மீதான தாங்க அழுத்தத்தை தடுப்பதற்காக “பிளான் பி” கட்டுப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பிளான் பி” கட்டுப்பாடுகளின் படி:-
1. பொதுமக்களுக்கு வைரஸை கட்டுப்படுத்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து உடனடியாகவும் தெளிவாகவும் கூறப்படும்.
2. கட்டாய முக கவச கட்டுப்பாடுகள் சட்டபூர்வமாக மீண்டும் அமல்படுத்தப்படும்.
3. பணியை வீட்டில் இருந்தே செய்ய மீண்டும் அறிவிப்பு வெளியாகலாம்.
4. கொரோனா சான்றிதழ்களை சில சூழ்நிலைகளில் அவசியமாக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
இதற்கிடையே “ஒமிக்ரான்” பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் NHS திறன் குறித்து முன்னணி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் “பிளான் பி” கட்டுப்பாடுகள் பிரித்தானியாவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிரதமர் அலுவலகம் வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் எந்த விதமான முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.