Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நண்பர்கள் சொல்லியும் கேட்கல… ரூ 15,00,00,000 கோடி நஷ்டம்?… என்னடா இது சமந்தாவுக்கு வந்த சோதனை..!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2018-ஆம்  ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து  96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில்  பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் சரியாக ஓடவில்லை. அதாவது, ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது.

கடந்த வாரமே படம் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சொன்னார்கள். அதேபோல படம் எதிர்பாராத பெரும் தோல்வியை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜு வுக்கு கொடுத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் ‘96’ படம் வெளியாகும் முன்னதாகவே படத்தைப் பார்த்து உரிமையை வாங்கினார் தில் ராஜு.

ஆனால் அவருடைய 20 வருட திரையுலக வாழ்க்கையில் இதுவரை ராஜு சந்தித்த முக்கியமான தோல்வி இது தான் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தை ராஜு  ரீமேக் செய்ய தொடங்கும் முன்பே, தெலுங்கில் இப்படம்  ஓடாது என நண்பர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் காதில் வாங்கிக்கொள்ளாமல், அதையும் மீறி அவர் தயாரித்து தோல்வியடைந்துவிட்டார் என்கிறார்கள். இப்படத்தின் மூலம் சுமார் ரூ.15 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம்  என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |