Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 4 பேர்… சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்..!!

குருஷேத்ரா நகரைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் கடத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி காணாமல் போனதாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், காணாமல் போன சிறுமி சிலரது உதவியுடன் மீண்டும் தன்னுடைய கிராமத்துக்கு திரும்பியுள்ளார். பின்னர் அந்தசிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்ததை கூறினார். அவர் கூறியதாவது, அதே கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களால் நான் கடத்தப்பட்டேன்.. பின்னர் ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்னை விற்றார்கள்.. அதுமட்டுமின்றி, ஒரு இஸ்லாமிய நபரால் நான் கட்டாய திருமணத்திற்கு உள்ளாக்கப்பட்டேன் என தெரிவித்தார்.. இதையடுத்து, அந்த சிறுமியின் குடும்பத்தினர் ஹரியானா மகளிர் ஆணையத்தில் இந்தசம்பவம் குறித்து புகாரளித்தனர்.

இது தொடர்பாக பேசிய மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் நம்ரதா கவுர், “பாதிக்கப்பட்ட சிறுமி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமி ஒரு நாளைக்கு 3ல் இருந்து 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Categories

Tech |