உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாப சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கிடையாது என்று சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேதாஜி தப்பிச் சென்ற விமானம் தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதை அவருடைய ஆதரவாளர்கள் நம்பாமல், அயோத்தியில் 1985 ஆம் ஆண்டு வாழ்ந்து கொண்டிருந்த கும்னாமி பாபா தான் நேதாஜிஎன தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சஹாய் ஆணையம் 2017 ஆம் ஆண்டு அளித்த அறிக்கை உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அறிக்கைமீது நடத்தப்பட்ட விசாரணையில் கும்னாமி பாபா நேதாஜி கிடையாது என்றும், அது நேதாஜியின் ஆதரவாளர் நேதாஜி போன்ற குரலை கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.