சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கினை தமிழக அரசு CBI விசரணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
கடந்த 19 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகனான இருவரும் ஊரடங்கை உத்தரவை மீறி நேரத்தை தாண்டி கடை நடத்தி வந்ததாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்த நாளே உயிரிழந்தார்கள்.
இந்த வழக்கினை நியாயமாக விசாரிக்க வேண்டும், சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் இந்த விவகாரம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கை நீதிமன்றம் அனுமதி பெற்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழக அரசு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தமிழக உள்துறை இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து அரசாணை வெளியிட்டது. தமிழக முதல்வர் நேற்று முன்தினம் சொன்ன நிலையில் நேற்று இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. முதல்வர் சொல்லி ஒருநாளில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது, தமிழக முதல்வர் எட்டப்பாடி இமேஜை உயர்த்தியுள்ளது.