ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஒரு தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் ஏதும் வெளியிடாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார், ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இதுபற்றி தைபேயில் அவர் கூறும் பொழுது, “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பதற்கான போட்டி அல்ல.
அமெரிக்காவில் 2 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்ட சோதனையை எட்டி இருக்கின்றன. ஆனால் ரஷிய தடுப்பூசி எந்த தகவலையும் வெளியிடாமல் அந்த நிலைக்குள் நுழைகிறது. அமெரிக்க தடுப்பூசி செயல்முறைகள், தங்கம் போன்ற தரமான, பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை கோடிக்கணக்கான டோஸ்கள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.