வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1/4 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 6
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கடாயில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பருப்புகள் , வேர்க்கடலை , உப்பு கலந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்தால் வேர்க்கடலைப்பொடி தயார் !!!