Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் பலி..?

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் பள்ளி பேருந்து ஓன்று 18 பள்ளி குழந்தைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது  பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த 18 குழந்தைகளில் 7 பேர் பலியாகியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது.

Image result for It is feared that 7 children may have been killed in a school bus crash in Uttarakhand

இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி காயமடைந்த  குழந்தைகளை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Categories

Tech |