Categories
மாநில செய்திகள்

“நாளை ஆடி அமாவாசை” இதற்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை….!!

ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு பல தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோயிலுக்குள் செல்லக்கூடாது, கோவிலின் வாசலில் நின்றவாறு சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்லவேண்டும். அதையும் மீறி உள்ளே சென்று சாமியை பார்க்க வேண்டும் எனில், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்களும் முக கவசம் கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புனிதத் தலங்களாகக் கருதப்படும் பல இடங்களில் நடைபெறக்கூடிய சாஸ்திர சம்பிரதாயங்கள் வழிபாடுகள் உள்ளிட்ட ஏதும் தற்போதுவரை நடத்தப்படவில்லை.

அதன்படி, நாளை ஆடி அமாவாசை என்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலானோர் இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் திதி கொடுத்து அவர்களை வழிபடுவதற்காக புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி சேதுக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று சடங்குகளை நடத்துவார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்றும், எவ்விதமான சடங்குகளையும் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடையை மீறி மக்கள் கூடினாலோ சடங்குகளை நடத்தினாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |