Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது வெளிநாடு இல்ல….. தமிழ்நாடு தான்….. உதகையில் வெள்ளை மழை…..!!

உதகையில் புல்வெளிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் வெள்ளைக் கம்பளம் போற்றியது போல் உறைபனி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தொடங்கும் உறைபனி பருவம் பிப்ரவரியில் விலகத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் நேற்றுமுதல் அதிகரித்து காணப்படுகிறது. உரைபனியின் தாக்கத்தால் தாவரவியல் பூங்காவில் குளிர் நிலை பூஜ்ஜியம் டிகிரியை தொட்டது. மிதமிஞ்சிய கடும் குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன.

தலை கூந்தல் புல்வெளி வெள்ளை கம்பளம் போல் காட்சியளிக்கின்றது. காந்தள், குன்னூர், ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. புது வெள்ளை மழை பொழிகிறது என உறைபனி கண்ணுக்கு இனியதாக காட்சியளித்தாலும் கடும் குளிரால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் பனி பொழிந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் பிற்பகலுக்கு பின்னரே வந்து செல்கின்றனர்.

Categories

Tech |