பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ள 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 7.09 % வாக்குகளே பதிவாகியுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9 மணி வரை 7.09% வாக்குகள் மட்டுமே தற்போது பதிவாகி இருக்கிறது. என்றால் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காரணமாக மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த வால்மீகி நகர், ராம் நகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4 ஆயிரத்து 999 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையம் என கண்டறியப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.வாக்குப்பதிவு மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசங்கள் அணிந்த நபர்கள் மட்டுமே வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தனியாக மையங்கள் மற்றும் தபால் வாக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த இரண்டு கட்ட வாக்கு பதிவு சதவீதம் என்பது மிகவும் குறைந்த அளவில் காணப்பட்டதால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகமானோர் வாக்களித்து சாதனையாக படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
बिहार विधानसभा चुनावों में आज तीसरे और आखिरी चरण का मतदान है। सभी मतदाताओं से मेरी विनती है कि वे अधिक से अधिक संख्या में लोकतंत्र के इस पावन पर्व में भागीदार बनें और वोटिंग का नया रिकॉर्ड बनाएं। और हां, मास्क पहनने और सोशल डिस्टेंसिंग का ध्यान भी अवश्य रखें।
— Narendra Modi (@narendramodi) November 7, 2020