Categories
மாநில செய்திகள்

இனி தான் ஆரம்பம்…. பிப்ரவரியில் புதிய உச்சம்….. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…..!!

வரும் பிப்ரவரியில் தமிழக்தில் நல்ல மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இந்த மழையானது  வழக்கத்தைவிட அதிகமான மழையை கொடுத்திருக்கிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில்  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையை  கண்டிக்கிறோம். கடந்த 1921ஆம் வருடம் 141.2 மில்லிமீட்டர் மழை பெய்தது அனைத்து வருடத்திலும் ஒப்பிடுகையில் இந்த வருடம்(1921) ஜனவரி மாதத்தில் பெய்தது அதிகபட்ச மழை அளவாகும். இதையடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் இன்னொரு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். வழக்கமாக பிப்ரவரி மாதம் குறைவான மழைப் பொழிவு தான் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக பிப்ரவரியில் மழை பெய்து வருகிறது.

அதன்படி வரும் பிப்ரவரி மாதம் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர்  தெரிவித்துள்ளார். கடைசியாக 2002 ஆம் வருடத்தில் பிப்ரவரியில் அதிக மழையை கிடைத்தது. அதுவும் டெல்டா பகுதிகளில் தான் அதிகம் மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை 1984ஆம் வருடம் பிப்ரவரியில் அதிகப்படியான மழை பெய்தது .இது கடந்த 200 வருடங்களில் பெய்யாத அதிகப்படியான மழை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த 2000 வருடத்தில் சென்னையில் நல்ல மழை பெய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த வருடம் ஜனவரியில் பொங்கலையொட்டி கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும்  செய்யும்  வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வியாபாரமும்பத்திக்கப்பட்டது . இந்நிலையில் பிப்ரவரியில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |