நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை இயக்குநர் கூறியதாகவும், அதற்கு ராஷ்மிகா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா தற்போது கார்த்தியுடன் இணைந்து ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் முதல் படமே தம்பியுடன் நடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக அண்ணன் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.