பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தீயிணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல கட்டிடத்தில் இருந்த 83 பேரும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் பாடசாலையில் தங்க வைக்கப்ட்டுள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.