Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் தரமே போச்சு… மடக்கி, மடக்கி BJPயினர் கைது… DMK மீது கடும் கோபத்தில் அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா பேசிய விவகாரத்தில், இந்த ஆட்சியியை பார்த்து. தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.  இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும்.

இதைப் போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக, மக்களுடைய கவனத்தை திருப்பி, அதை ஒரு பேசும் பொருளாக நடத்திக் காட்டி விடலாம், என்று திமுக நினைத்தால், அது மாபெரும் தவறு. அதுவும் குறிப்பாக இந்த பேச்சுல, எப்படி சூத்திர சமுதாயத்தை ?  இவரே ஒரு அடையாளத்தை பயன்படுத்தி,  அது கீழ் ஜாதி என்று இவரே  சொல்லி, அதில் பிறந்தவர்கள் குறிப்பாக ”வேசியின் மகன்கள்”, ”மகள்கள்” என்று இவரே  சொல்லி, அரசியலிலே  எப்படிப்பட்ட நாகரிகமான பேச்சுக்களை பார்க்க வேண்டிய தமிழக மக்களுக்கு,  அரசியலில் தரத்தை அண்ணன் ராசா  இங்கே குறைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடு தமிழகம் முழுவதுமே நடந்து கொண்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய துரதிஷ்டம் என்னவென்றால், இதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே அனுப்புவது  திமுக அரசின் ஒரு புதிய வாடிக்கையாக நாம் பார்க்கின்றோம். அதாவது ஏ ராசாவுடைய சர்ச்சை பேச்சை கண்டித்து யாராவது எதிர்த்து பேசினார்கள் என்றால் கைது நடைபெறுகின்றது.

உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |