கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.
இந்தப் பாடலோடு தொடர்புடைய ஒரு உண்மை நிகழ்வு இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் விதியை குறை சொல்லி இறைவனை வசை பாடுவதை விட்டுவிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டி கவிஞர் வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சமயம் அது. ஆல் இந்தியா ரேடியோ நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி சென்னையில் காலத்தை ஓட்டி வந்தார் . ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலகம் அவருக்கு கிடைக்கவில்லை.
போதிய வருமானமின்றி சென்னையில் அவரால் காலம் தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புகள் வந்தாலும் எதுவும் சொல்லும்படியாக அமையவில்லை. நாகேஷ் இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கி இருந்த காலகட்டம் அது. இவர்களை பார்க்க பாடகர் எஸ் பி பி ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார். மூன்று பேரும் எங்காவது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வரட்சி காரணமாகா ஓவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது. சரி இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது நம்ம ஊருக்கே போய் விட வேண்டியது தான் என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டுவந்த பெட்டியுடன் ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார் வாலி.
அந்த நேரம் அங்கு வந்த எஸ் பி பி ஸ்ரீனிவாஸ் சுமைதாங்கி என்கின்ற படத்திற்கு பாட்டு பாடினேன் என்று கேட்கிறாயா என்று வாலியைப் பார்த்து கூறியதும் மறுப்பு சொல்ல முடியாமல் வாலி அரை மனதுடன் சரி பாடுங்கள் என்று சொல்ல ஸ்ரீனிவாஸ் மயக்கமா கலக்கமா என்ற பாடலைப் பாடத் துவங்குகிறார். பாடப் பாட என்ன கூறுவதென்று தெரியவில்லை. இனி வெற்றி பெறாமல் திரும்பக்கூடாது என்று நினைத்த வாலி சினிமா துறையிலும் சாதித்து காட்டினார்.