Categories
தேசிய செய்திகள்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை…. தயாநிதி மாறன்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.

தயாநிதி மாறன் மக்களவை க்கான பட முடிவு

இந்த விவாதத்தில் பேசிய  திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில், உமர் அப்துல்லா பற்றிய தகவல் ஏதும் இது வரை தெரிவிக்கப் படவில்லை. அவரை காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.மக்களவை உறுப்பினர் உமர் அப்துல்லா எங்கே ? அவரின் நிலை என்ன என்று தெரியவில்லை. மக்களவை உறுப்பினரை பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடமை என்று தெரிவித்தார்.

Categories

Tech |