கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் பிரபல பொறியியல் கல்லூரி ஒன்று புதிதாக பிளாக் என்று சொல்லப்படும் பெரிய கட்டிடம் ஒன்றை கட்டி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமான பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது சிமெண்ட் கொண்டு நிரப்படும் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் கட்டிடத்தின் பகுதி ஒட்டுமொத்தமாகவே சரிந்து விழுந்தது. இதனால் அந்த கட்டிடம் ஒட்டுமொத்தமாக சரிந்து, கம்பிகள் இடிபாடுகளுக்கு நடுவே வடமாநில தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 6 வடமாநில தொழிலாளர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.