Categories
மாநில செய்திகள்

ஒன்றுபட வேண்டிய தருணம் இது… அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் கொரோனா நோய் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க காணெலி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது.

அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்றும் கொரோனாவை விரட்ட சமூக தொடர்பில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |