Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள்.

அதிலிருந்து அதன் முக்கியத்துவம் புரியும். இன்னொரு பக்கம் இந்தியா – லடாக் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்குமே பொதுவான அச்சுறுத்தலாக இருக்கின்றது.சீனா இந்த பிராந்தியத்தில் தான் தான் மிகவும் வலுவான நாடு என்று இருந்த சூழ்நிலையில் இருந்து இப்போது உலகம் முழுவதுமே தன்னுடைய ஆதிக்கம் வர வேண்டும் என விரும்புகிறது.

இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் போன்ற நாடுகள் தவிர அவை தாண்டி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என்று சீன கடல் முழுவதும் மற்றும் ஆப்பிரிக்கா கண்டம் ஆகிய இடங்களிலும் ஆதிக்கத்தைப் பரப்ப முயற்சி செய்கிறது.ஆகவே தான் அமெரிக்கா சீனாவின் இந்த முயற்சிகளை தொடர்ந்து இப்படியே விடக்கூடாது. அதை முறியடிக்க வேண்டும்.

அதை தவிர இந்தியாவுக்கு உதவி செய்வதன் மூலம் இந்திய பிராந்தியத்திலே அமெரிக்காவுக்கு ஒரு வலுவான கூட்டணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் தேர்தல் என்று இருந்தாலும் இந்த கொள்கைகள் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் என்பதை காட்டும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

Categories

Tech |