தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இயக்குனருக்கும் சிவாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் வெளியானது. இந்த வதந்திகளுக்கு தற்போது படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது மாவீரன் படத்தின் சூட்டிங் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் மழையின் காரணமாகத்தான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நவம்பர் ஆம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.