ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போகலூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியினர் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராமத்தில் தேவைக்கேற்ப புதிய குடிநீர் குழாய்களை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.