திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வுக்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை தாங்க,
அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் போக்குவரத்து அதிகாரிகள், காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.