Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பு…! ”உங்க பேச்சை கேட்கல” நீங்க தலையிடக்கூடாது …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

அதேபோல வர்த்தக பணிகளும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். 45 நாட்களுக்கு பிறகு திடீரென மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே முதல் நாள் ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு இந்த கடைக்கு வந்து இருக்கிறார்கள். அடுத்த நாளே நிலைமையை சீர் செய்யப்பட்டு விட்டது.

 

டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் தொடர்ந்து இயங்க கூடியது தான். தமிழக அரசே நடத்த கூடியது எனவே இந்த மதுபான கடைகளை தொடர்ச்சியாக இயங்கு வதற்கு அனுமதி வழங்க வேண்டும் .அதிக பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் நாங்கள் கடைகளை திறக்க வில்லை என்பதையும் அவர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாக சொல்லி இருக்கிறது. மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது  என்று ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |