வருமானவரித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.இதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியில் கல்லூரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கண்கானித்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 2018-19, 2019-20 ஆம் ஆண்டு கணக்கான காலாண்டு கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.மேலும் மார்ச் 13ம் தேதிக்குள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆவணங்களுடன் 13ஆம் தேதி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.