தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை வழங்கப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு என கூறியுள்ளார். சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் என்றும் அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.
(2/2)— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2020