இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று ராஞ்சியில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுடன் செல்ல இருந்தார்.ஆனால் அவர் நாளை கேரளாவில் தொடங்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசனுக்கான தொடக்க விழாவிற்கு செல்ல வேண்டியிருப்பதால் இந்த பயணம் ரத்தானது.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நான் இந்திய கிரிக்கெட் அணியுடன் ராஞ்சிக்கு செல்ல விரும்பினேன். ஆனால் இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசனுக்கான தொடக்கவிழாவில் கலந்து கொல்லவேண்டிய சூழல் உள்ளதால் என்னால் ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கு செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.மேலும் கங்குலி ஏற்கனவே ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவர் தாதகிரி என்ற ரியாலிட்டி ஷோவின் படப்பிடிப்பைத் தொடர உள்ளார்.