Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Image result for வைகோ ஆவேசம்

பின்னர் வைகோ தரப்பில் தாக்கல் செய்யப்படட மனுவையடுத்து அவரின் சிறை தண்டனையை 1 மாதத்திற்கு நிறுத்தி வைக்கபட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில் , நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன். நான் பேசியது தேசதுரோகம் அல்ல. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது. எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன் என்று ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |