Categories
சினிமா தமிழ் சினிமா

பழைய காதலியை சந்திக்கச் சென்றது போல இருந்தது…. வசந்தபாலன் உருக்கம்…!!

13 வருடம் கழித்து தி நகருக்குச் சென்ற வசந்தபாலன் மனதில் ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி நகரில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இது இருந்தது.

இந்நிலையில் இப்படத்தை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கும் புதிய படத்திற்காக ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக 13 வருடம் கழித்து தி நகர் சென்றுள்ளார். அப்போது அவர் அனுபவித்த உணர்வுகளை தன் முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், புதிய படத்திற்கு ஆடைகள் வாங்குவதற்காக 13 வருடங்கள் கழித்து பழைய காதலியின் பார்க்க செல்வது போலவே தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு சென்றேன். அங்கு அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்று கூறிய பெண்களின் குரல் என்னை வரவேற்றது. மேலும் வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கின்ற ராஜாவையும், சமோசா விற்கும் பெரியவரையும், கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன்.

இதனால் என் மனம் அங்காடித் தெரு சூட்டிங் நாட்களுக்கே சென்றது. நான் இளநீர் குடிக்க முகமூடியை கழட்டிய போது சிலர் என்னிடம் வந்து ஜெயில் படத்தின் வெளியீடு பற்றி விசாரித்தனர். அதன்பின் ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு துணி எடுக்க சென்றபோது மேனேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்ணை கடுமையாக திட்டி கொண்டு இருந்தார்.

அதனைக் கேட்க சகிக்காமல் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். இதற்கிடையில் என் மனதில் அங்காடித்தெரு படத்தில் வரும் “கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |